Sakthi Ravanan – Parai Artist & Trainer
பிறந்த ஊர் : வெள்ளலூர் , கோவை மாவட்டம் ,தமிழ்நாடு.
துறை : தாளக்கருவிகள் – பறை , துடும்பு
கள அனுபவம் : 15 ஆண்டுகள்
கல்வித் தகுதி :
-இளநிலை கணிப்பொறியியல் ( Bsc Computer Science )
-முதுநிலை கணிப்பொறி பயன்பாட்டியியல் ( Master of Computer Application )
-பறையாட்டக்கலை பட்டயம் ( Diploma in Paraiyattakalai )
நிறுவுநர் :
– நிமிர்வு கலையகம்
– முழவு இசை அங்காடி
– கலைநிலம் பயிற்சிக்களம்
– மென்கலை தகவல் தொழில்நுட்பம்
கலைப்பயணம்:
1999-2006 – கோவில் இசைக்குழு :
வெள்ளலூர் சௌடம்மன் கோவில் – பண்டரிநாத பஜனைக்குழு
தர்மராஜா கோவில் – இராதா கிருஷ்ணர் பஜனைக்குழு
2007 – முதல் துடும்பாட்டக்குழு :
வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளி
மரபு அடிகளுடன் உருவாக்கிய புதிய அடிகள் ஆட்டத்துடன் கலந்து கொண்டு கோவை மாவட்ட அளவில் முதலிடம் வென்று மாநில போட்டிக்கு தகுதி.
2009 – முதல் மேடை நிகழ்ச்சி :
வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கல்லூரியின் முதலாமாண்டில் நண்பனர் திரு.நாகராஜ் உடன் துடும்பு
2010 – நண்பர் திரு.அரி உடன் மூன்று பேராக இசைத்தனர்.
2011 – அப்பாவின் முதல் பறை
பறை கற்க ஆர்வம் தெரிவித்தவுடன் தந்தை கு.வேல்முருகன் அவர்கள் கருவி வாங்க பணம் அளித்து வாங்கி வர சொன்னார்.
பள்ளி பருவத்தில் தானாக கற்ற ,உருவாக்கிய அடிகளை பறையில் பயிற்சி
பறையின் முதல் ஆசான்
கோவை பல்லடம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் திரு.கணேஷ் ஐயா ஒருங்கிணைப்பு செய்த பயிற்சி பட்டறையில் ஆசான் திரு.சமர்பா குமரன் அவர்களிடம் நண்பர் அரி அவர்களுடன் ஒருநாள் அடிப்படைப் பயிற்சியில் சொற்கட்டுகள் பற்றி அறிந்து கொண்டது.அங்கு தான் மையக்குழுவினரை முதன் முதலில் சந்தித்தது.
இரண்டாம் ஆசான்
பல்லடம் அனுப்பம்பட்டி பிரகாசு அவர்கள் ஒருங்கிணைத்த இருநாள் பறை பயிற்சி பட்டறையில் ஆசான் திண்டுக்கல் ராதாரவி அவர்களிடம் மேடைக்கான அடி அடவுகளை கற்று கொண்டது.
நிறுவுநர் / உருவாக்கியவை :
- நிமிர்வு கலையகம் ( Nimirvu Kalaiyagam )
( 2012 ) பறைக்கான குழுவினை பல்லடம் பயிற்சியிக்கு பின் திருப்பூர் பள்ளி மாணவர்களால் உருவான குழுவும் , தனியே கோவையில் உருவாக்கிய குழுவுடன் இணைத்து நிமிர்வு கலையகம் என்ற புதிய குழுவினை உருவாக்கியவர்.
- பறை சீருடை ( Parai Uniform )
பறைக்கான சீருடையில் ஜீன்ஸ் ( கால்சட்டை ) , மேல் சட்டை , காலணி ( shoe ), சலங்கையுடன் நவீன மாற்றம் செய்தவர்.
- பறை இசைக்குறிப்புகள் & பாடத்திட்டம் ( Parai Syllabus )
பள்ளி பருவத்தில் இசைத்த தாளங்களை பறை ஆசான்களிடம் கற்ற அடிப்படை இசைக்குறிப்புகளின் வழியே அடிகளுக்களுக்கான புதிய வடிவத்தினையும் , பாடத்திட்டத்தினையும் ,கற்பித்தல் மற்றும் கற்கும் முறைகளையும் உருவாக்கியவர். தற்போது உலகம் முழுவதும் பெரும்பான்மையாக பின்பற்றப்படும் பாடத்திட்டமாக மாறியுள்ளது.
- பறையும் பரதமும் ( Parai Bharatham )
( 2013 ) சதிராட்டத்தினை ( பரதம் ) பறையோடு இணைந்து நிகழ்த்தும் தனி வடிவமாக உருவாக்கியவர்.அதற்கு முன்பு மூத்த கலைஞர்கள் பரதம் அடவுகளை தனியே பறை இசைத்து ஆடியுள்ளனர்.பரத கலைஞர்கள் ஆட பறை இசைத்துள்ளனர். இதனை தனி வடிவமாகவே
*செவ்வியல் தாள நடைகளை பறையில் இசைத்து சதிர் (பரதம்) பறையின் மரபு அடிகளுக்கு சதிர் (பரதம்)
*பறை கலைஞரும் சதிர் (பரத) கலைஞருடன் இணைந்து ஆட்டம்
*கொன்னகோல் சொற்கட்டுகளுக்கு ( சதிகளுக்கு ) பறை இசைக்குறிப்பு
- நிமிர்வு கலையகம் பறை இசைப்பள்ளி ( School of Parai Music )
( 2015 )மாநிலம் தழுவிய பறைக்கான பள்ளியினை கோவை ,திருப்பூரில் துவங்கி இன்று சென்னை ,காரைக்குடி,திருச்சி,பொள்ளாச்சி, கோவையில் சூலூர்,வெள்ளலூர்,ஒண்டிப்புதூர் என பரவியுள்ளது.கட்டமைப்புடன் தொடர்ந்து இயங்கும் பள்ளிக்கான முறையினை வடிவமைத்தவர்.
- பட்டய படிப்பு பறையாட்டகலை ( Diploma in Paraiyattakalai )
( 2017 ) பறையாட்டக்கலைக்காக உருவாக்கிய பாடத்திட்டத்தினை தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் செயல்படும் கயிலை குருமணி சமுதாய கல்லூரி வழியாக பாரதியார் பல்கலைகழகத்தில் தொலைதூர கல்வி அடிப்படையில் ஓராண்டு பட்டயப்படிப்பு அங்கீகாரத்தினை பேரூராதினம் திரு.சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களின் வழிகாட்டுதலில் பெற்றவர்.
- நிமிர்வு கலையகம் பறை ஆய்வு நடுவம் ( Parai Research Center )
( 2020 ) பறை கலையினை அடுத்தக்கட்ட வளர்ச்சி நிலைக்கு எடுத்த செல்ல வேண்டி கள ஆய்வு மற்றும் நூல் வாசிப்புகளுக்கும் ,கருத்தரங்கு பணிகளுக்குமான நடுவத்தை உருவாக்கியவர்.இதன் வழியே “ பறையோடு ஓர் உரையாடல்” என்ற கலந்துரையாடலை உலகம் முழுவதுமுள்ள பெரும்பான்மையான பறைக்குழுக்கள் ,கலைகுழுக்கள் , ஆய்வாளர்கள் , மூத்த ஆசான்கள்,ஆய்வு மாணவர்கள் ஆகியோருடன் உடன் நடத்தியது.
- நிமிர்வு கலையகம் படிப்பறை ( Library )
( 2021 )ஆய்வு நடுவத்தின் பணிகளுக்கு தேவையான நூல்களை ஒருங்கிணைத்து பயன்படுத்தும் நோக்கில் “படிப்பறை” என்ற நூலகத்தினை தொடங்கியவர்.
“எச்சிறு ஒளியேனும் நம்பிக்கையுடன்
விடாமல் பிடித்து நட…
பேரொளியாய் மாறுவாய்.”
—————————————————————————–
“Log.. learn .. Repeat ..”
—————————————————————————–
“இசையால் நிறையட்டும் வாழ்வு.”
—————————————————————————–
“பறை நெடும்பயணத்திற்கு தயாராவோம்.”
—————————————————————————–
“I am a Music Believer .”
—————————————————————————–
“இசை எனும் இயங்கியல்.”
—————————————————————————–
“ஆழ்மனதுணரும் மகிழ்ச்சியே இசை.”
—————————————————————————–
“எவை உள்ளம் முழுமையும் நிறைந்துள்ளதோ
அதுவே தெளிவுற வெளிப்படும்.”
—————————————————————————–
“தீரா உலாக்கள் தீராத தேடலை தரும்.”
—————————————————————————–
“எவை பலமோ அதை பலவீனமாக மாற்றும் சூழல்களை
கடப்பதே சாலச்சிறந்த தற்காப்பு.”
—————————————————————————–
“ தன்மகிழ்வை பகிர்தலே நல்லிசை.“
—————————————————————————–
“தேடுபவை எல்லாம் அடையாது.
தேர்ந்தெடுத்தவை மட்டுமே அமையும்.”
—————————————————————————–
“உங்களை நீங்களே கொண்டாட தயாராகினாலே போதும்
கவலைகள் நெருங்காது.”
—————————————————————————–
“முழுமையற்ற ஓர் புரிதலே ஆர்வத்துடன் இருப்பை மேற்கொள்ளும்.”
—————————————————————————–
“இதயங்களை இசையால் நிரப்புங்கள்.
தக்க நேரத்தில் கைவிடாமல் காக்கும்.”
—————————————————————————–
“கலைமொழி கற்று தெளிந்தால் கணியன் கூற்று எளிதாகும்.”
—————————————————————————–
“இடத்தின் தன்மையும் இயங்குதலின் நோக்கமுமே
உங்கள் பொறுப்புகளை தீர்மானிக்கின்றன.”
—————————————————————————–
“முழுமையடையாத மனநிறைவே
இயங்குதலை ஊக்கப்படுத்தும் உந்துகோல்.”
—————————————————————————–
“ஆழ்ந்து நோக்குங்கள்.
உணர்வின் மொழி இசையாய் ஒலிக்கும்.”
—————————————————————————–
“நல்ல காரணிகள் நல்மாற்றத்தின் வாசல்கள்.”
—————————————————————————–
“செயலின் தாக்கத்தை கணக்கிட்டாலே போதும்
அதன் ஆக்க வேகம் புலப்படும்.”
—————————————————————————–
“கலையை மரணத்தால் என்ன செய்திட இயலும்.?
ஒலிக்கின்ற உங்கள் பறை இசையில் பிறப்பேன்.”
—————————————————————————–
“மரணம் வென்ற கலையும் கலைஞர்களும் மண்ணில் வாழ்வது அவர்களது படைப்புகளின் வழியே.”
“ இசை என்ன செய்யும்..?
உளமார உங்கள் மனத்தை வெளிக்காட்டும்.”
—————————————————————————–
“உள்ளூரும் இசையாய் உங்களை உணருங்கள்.”
—————————————————————————–
“வலுவில்லாமல் இழப்பதை விட
பலமறியாமல் இழப்பதே தோல்வியை தொடர செய்யும்”.
—————————————————————————–
“இசையின்றி அமையா உலகு.”
—————————————————————————–
“Make more music & thinking ,it’s never get tired.”
—————————————————————————–
“Parai always give the depth impression.”
—————————————————————————–
“இசை – உணர்ந்தறிதலின் நேர்நிலை.”
—————————————————————————–
“இசைமொழி இயக்கும் எல்லையின்றி.”
—————————————————————————–
“சிலவற்றை இரசிக்க சாலச்சிறந்த வழி தள்ளி நிற்பதே.”
—————————————————————————–
“புதியது கற்றலே ஒவ்வொரு நாளும் புத்துயிர் தரும்.”
—————————————————————————–
“இசையென மொழிதலும் இயைந்திருத்தலும் கலைஞனின் இயல்பே.”
“கலப்பவையனைத்தையும் தன்தன்மையாக்கும் – கருப்பு”
—————————————————————————–
“நிறைவாய் உணர்ந்தால் நிறுத்தி விடுங்கள்.
ஆனால் அது இசைக்கு எப்போதும் இருந்ததில்லை.”
—————————————————————————–
“ஆற்றல்கள் உருவாக்கம் பெறும் போதெல்லாம்
இசை நம்முடன் இருக்கிறது.”
—————————————————————————–
“புதிய முயற்சிகள் உள்ஊற்றை வலுப்படுத்தும்.”
—————————————————————————–
“வேண்டும்பொழுது இசைகொள்வது தீரா தாகம்.”
—————————————————————————–
“எத்திசை இயங்கினும் இசைவெளியே காண்.”
—————————————————————————–
“பயணமே பக்குவம் கற்கும் வகுப்பறை.”
—————————————————————————–
“அருகினால் உடையும் தூரபிம்பங்கள் அதிகம்.”
—————————————————————————–
“உங்களை உளமார எண்ணும் ஒவ்வொரு நேரத்திலும்
தனித்துவத்தை நெருங்குகிறீர்கள்.”
—————————————————————————–
“பயணம் – இலக்கை அடைவதை காட்டிலும்
வழியை தெளிவாய் விளக்கும்.”
—————————————————————————–
“நிலைத்திருத்தலில் நிற்காமல் செல்வோம்.”
—————————————————————————–
“யாவும் இசையெனினும் தாளமாய் உணர்கிறேன்.”
—————————————————————————–
“இசைத்தல் இயற்கையின் எதிரொலி.”
—————————————————————————–
“அசுரர்களின் அளப்பறிய இசைக்கருவி வீணை.”
—————————————————————————–
“விழும் உயரம் எதுவாகினும்
எழும் வேகமே முதன்மை.”
—————————————————————————–
“இலகுவான மனம் ஈராயிரம்
இறக்கைகளுக்கு சமம்.”
—————————————————————————–
“இழந்தவைகளுக்கு இசையே ஈடென பயணிப்போம்.”
—————————————————————————–
“நான் நினைக்கும் இடத்தில் நானே இல்லாத போது
நீங்கள் நினைக்கும் இடத்தில் இருப்பது கடினமே.”
—————————————————————————–
“வசந்த காலங்கள் மனதால் உணரப்படுவை மட்டுமே.”
—————————————————————————–
“மொழி அகத்தை ஆழப்படுத்தி புறத்தை வசமாக்கும்.”
—————————————————————————–
“பேராற்றல் நிறைந்த இசை எப்போதும் உங்களிடம் உள்ளது.
அதனை உணரும் படியான ஒன்றே – பயிற்சி.”
—————————————————————————–
“எடுக்கும் பணிகளை ஏதுவாக செய்யும் சூழல் அமையாத போதுதான்
உளத்திடத்தின் பலம் வெளிப்படும்.”
—————————————————————————–
“நித்தம் சிந்தை தெளிவுறும் இசை காண்.”
—————————————————————————–
“உள்இருப்பை கூர்ந்து கவனியுங்கள்.
அதுவே ஆயிரம் மைல்களை கடக்க உதவும் எரிபொருள் கிடங்கு.”
—————————————————————————–
“ஒளியாய் இருக்க முயலும் முன்
நிழலின் இருட்டை உணர்ந்து கொள்ளுங்கள்.”
—————————————————————————–
“இசைக்கு இணைக்கும் பரிச்சயம் அதிகம் உண்டு.”
—————————————————————————–
“பொறுமைகளை காலம் கற்பிக்கும் அல்லது அனுபவங்கள் அளித்துவிடும்.”
—————————————————————————–
“பார்வையின் தூரத்தில் உள்ளது வாழ்க்கை.”
—————————————————————————–
“இசையை அளிப்பவரை விட
அனுபவிப்பவர்களுக்கே அதன் பயன் முழுமை தெரியும்.”
—————————————————————————–
“இசைதலற்ற இசையில் தேடி கிடைக்க எதுவுமில்லை.”
—————————————————————————–
“எவ்வகையிலும் உன்னிடமிருந்து புறப்படும் ஒன்றை
திருப்பி நீயே ஏற்றுகொள்ள பக்குவப்படு.”
—————————————————————————–
“கொண்டாட்ட இசை என்பது மனத்தின் மாசில்லா நொடிகளில்
பிறப்பெடுக்கும் ஒன்று.”
—————————————————————————–
“இசையோடு ஏதோவொரு புள்ளியில் இணைந்திருத்தல்
இன்பத்தின் இருப்பிடமாகும்.”
—————————————————————————–
“யாவும் இசையாய் உள்ளவர்களின் உலகம் தனியானது.”
—————————————————————————–
“ஆக்கத்தினை மறந்த எவையும்
நெடிய ஊக்கம் பெறாமல் நிற்கும்.”
—————————————————————————–
“மனத்திசையை நோக்குங்கள்.
அதுவே சிறந்த வழிகாட்டி.”
—————————————————————————–
“ஆட்கொண்டு அருள் செய்யும் தன்மை
இசைக்கு உண்டு.”
—————————————————————————–
“Follow the flow or leave the Flow.”
—————————————————————————–
“நெருப்பின் இருப்பே
சூழ்வதை வயப்படுத்துவதே.”
—————————————————————————–
“பறையும் பரதமும் – கலை சமன்.”
—————————————————————————–
“எவை சரிநிலை போக்கினை உணர்த்திடுதோ
அவற்றின் பயணம் வெகுதூரமானது.”
—————————————————————————–
“ஆட்டம் – உடலும் உள்ளமும் இயைந்து இயக்கும் ஆற்றல் செயல்பாடு.”
—————————————————————————–
“இசை பெருவெளியில் எல்லையில்லாமல் சென்றிடுவோம்.”
—————————————————————————–
“ஆட்டத்தில் காணும் நளினங்கள் அனைத்தும்
உள்ளத்தின் கொண்டாட்ட வெளிப்பாடுகள்.”
—————————————————————————–
“மண்டைக்குள் ஓடும் மாய இசையே,
சில இடங்களில் உங்களின் உரு.”
—————————————————————————–
“கொண்டாட்டத்தின் துவக்கப்புள்ளியை உங்களிடமிருந்து பகிருங்கள்.”
—————————————————————————–
“இசை உயிராய் உங்களில் நிறைந்திருக்கும்
வழியினை தேடுங்கள்.”
—————————————————————————–
“திரிந்தோடும் திசையனைத்தும்
இசையால் நிரப்புங்கள்.”
—————————————————————————–
“இருப்பதை கொண்டாட நேரம் ஒதுக்குங்கள்.
புதியவையாய் அதுவே உருமாறும்.”
—————————————————————————–
“இசைப்பயனின் முதல் நுகர்வோர்
அதன் நிகழ்த்துநரே.”
—————————————————————————–
“அடிப்படை என்பது ஆழ ஊன்றி அகலச்செல்லும்
பாதையின் முதல் அடி.”
—————————————————————————–
“பகிர்ந்தளித்தலே இசையின் இன்பத்தை பெருக்கும்.”
—————————————————————————–
“துவண்ட போதெல்லாம் உயிர்த்தலை அளிப்பதே இசை.”
—————————————————————————–
“வந்தவற்றை உணர்வது என்பது சில நேரங்களில் வரமே.”
—————————————————————————–
“நெருப்பை சூழ்ந்திடுங்கள்,
நெருங்கிடாதீர்கள்.”
—————————————————————————–
“இசையாய் இதயங்களில் பரவிட ஏது தடை!?!?”
—————————————————————————–
“கலையின் மீது அன்பினை ஆழ விதையுங்கள்.
அது பன்மடங்காக பகிர்ந்தளிக்கும்.”
—————————————————————————–
“பறை – உயிரின் இசையாய், இயக்க ஆற்றலாய் நிறைந்துள்ளது.”
—————————————————————————–
“உள்ளோடுவதை உணர்ந்து வெளியேற்றும் இடமே
நமக்கான சுதந்திர வெளி.”
—————————————————————————–
“உண்மையின் தாக்கம் உள்ளதை உணர்வதே.”
—————————————————————————–
“கலையின் கவித்துவம் கற்றோரின் கற்பனையே.”
—————————————————————————–
“புத்துயிர்த்தலில் முக்கியமானது
முன்னொரு மரணம்.”
—————————————————————————–
“தெளிந்த நிலைக்கு தீர்வுஎட்டா குழப்பம் உதவும்.”
—————————————————————————–
“கட்டற்று கற்க,
உன்னில் எழுவதை மதி.”
—————————————————————————–
“இருப்பை கவனிக்க எதிர்திசை தேவையாகிறது.”
—————————————————————————–
“விழும் தூரத்தை பொறுத்தே
எழும் வேகம் அமையும்.”
—————————————————————————–
“உள்ளிடும் இசையினை உணர்வாய் காண்.”
—————————————————————————–
“இயல்பாக்குதலை இசையின்வழி கற்று கொள்ளுங்கள்.”
—————————————————————————–
“அரியாசனங்களின் ஆற்றல்
அமர்பவர்களை பொறுத்தே உள்ளது.”
—————————————————————————–
“இளைப்பாறுங்கள்.
இறுகிய மனம் கனமானது ,
ஓட்டத்தின் வேகத்தை குறைக்கும்.”
—————————————————————————–
“நேர்த்தியின் வரையறை என்பது முடிவுக்கு முடிவு மாறுபடும்”.
—————————————————————————–
“அடையாதிருப்பவை எல்லாம் கவனத்தின் இருப்பில்
இல்லாதவை மட்டுமே.”
—————————————————————————–
“மனவலிமையினை நிர்ணயிக்கும் இடங்களில் எல்லாம்
இசையே துணை நிற்கிறது.”
—————————————————————————–
“மிகச்சிறந்த இரசிகனே கலைஞனாக உருமாறுகிறான்.”
—————————————————————————–
“தெளிவாகுதல் என்பது காலத்தின் கணக்கில்
அவ்வொப்போது நடக்கும் நிலையடைதல் மட்டுமே.”
—————————————————————————–
“அகவை தரும் அறிவை உணர முயன்றால் மட்டுமே
இலகுவாதல் சாத்தியமாகிறது.”
—————————————————————————–
“சூழ்நிலைகளின் வசம் நாம் இருக்கும் போது,
கிடைக்காத அனைத்தும் பெரும் வாய்ப்பாக தான் தெரியும்”.
—————————————————————————–
“When you find your energy regeneration , time to get the source.”
—————————————————————————–
“கடினங்களை கடக்கும் நொடிகளை தெரிந்தால் வாழ்வு ஆக்கமாகும்”
—————————————————————————–
“எப்பொழுது உங்கள் ஆற்றல் மீள்உருவாக்கத்தின் திறனை அறிகிறீர்களோ, அப்போது நீங்கள் தயாராகுகிறீர்கள்.”
—————————————————————————–
“நீரோட்டத்தின் வேகத்தை வழித்தடத்தின்
தடைகளும் உயரங்களுமே முடிவு செய்யும்.”
—————————————————————————–
“இசையில் நிகழ்த்துதல் என்பது உடலாலும் மனதாலும் இயைந்த போக்கில் நடப்பது. மற்றவை எல்லாம் காண்பித்தல் மட்டுமே.”
—————————————————————————–
“நம்மை உடைக்கும் பல சூழல்கள்
மீண்டும் சரியாக வலுவாக கட்டமைக்க உதவிய கூறுகள்.”
—————————————————————————–
“கலைஞனின் பெருமதிப்பென்பது
மக்களின் கவலை மறந்த புன்சிரிப்பிலும் ஆற்றுதலிலும் உள்ளது.”
—————————————————————————–
“தேடலில் முதன்மையானது தன்னிலை அறிய முயல்வதும்
அறிந்ததை புரிவதும்.”
—————————————————————————–
“சிலநேரம் இசைகள் மூளையின் கட்டுப்பாட்டை
தனதாக்கும் வல்லமை பெறுகின்றன.”
—————————————————————————–
“பலத்தினை அறிய சோதனைகள் தேவையில்லை,
சூழல்களே போதுமானது.”
—————————————————————————–
“இருக்கும் போக்கை இரசித்திட இடமென்ன பொழுதென்ன…?”
—————————————————————————–
“தன்பகுப்பாய்விற்கு அளிக்கும் நேரத்தை பொறுத்தே
செயல்பாட்டின் வேகம் அமையும்.”
—————————————————————————–
“இசையினை இதயங்களில் நிரப்புகள் பின் பகிருங்கள்.
வட்டியும் முதலுமாய் வந்தடையும்.”
—————————————————————————–
“உளமும் உடலும் நிகழ்வில் இருக்கவே
நிகழ்த்துக்கலைகள் தேவையாகிறது.”
—————————————————————————–
“உனையன்றி வேறேதும்
உன்னை தடுக்கவோ வளர்க்கவோ முடியாது.”
—————————————————————————–
“ஆழ்ந்திருத்தலை தவிர
வேறெதுவும் உங்களை சீர் செய்யாது.”
—————————————————————————–
“இசை இயல்பூக்கத்தில் தாக்கம் அளிப்பவையாகிறது.”
—————————————————————————–
“காலத்தின் தேவைகளை சூழல்கள் வழிகாட்டும்.”
—————————————————————————–
“வேண்டியவற்றை ஆழ நினையுங்கள்
அது செயல்கூட்டும்.”
—————————————————————————–
“என்னுள் எழும் இசையே
இயக்(ங்)கும் வல்லமையினை தருகிறது.”
—————————————————————————–
“வாழ்வதென்பதே சிறப்பான ஒன்று தான்.
அதனை கவலையிடம் ஒப்படைக்காதீர்கள்.”
—————————————————————————–
“திடகாத்திரத்தை அளிக்கும் எதுவாயினும்
உள்ளன்புடன் இணைந்திடும்.”
—————————————————————————–
“எடுக்கும் முடிவுகளில் உண்மை இருப்பின்
தெளிவு தானாக வந்தடையும்.”
—————————————————————————–
“உங்களை தகர்க்கும் விடயங்களை
ஒரு கணம் எதிர் நின்று நோக்குங்கள்.”
—————————————————————————–
“வண்ணங்களை போல் உங்கள் எண்ணங்களை அழகாக்குங்கள்.”
—————————————————————————–
“விருட்சங்களின் வளர்ச்சியினை காணுவதை போல
வேர்களின் ஆழத்தையும் கவனியுங்கள்.”
—————————————————————————–
“உங்களை விட யாரும்
உங்களை கொண்டாடி விட முடியாது.”
—————————————————————————–
“பயனுற கிடைப்பவை எல்லாம்
பெறுவதின் நல்நோக்கில் உள்ளவையே.”
—————————————————————————–
“வருவதனைத்தையும் கொண்டாடி மகிழ்வோம்.”s
—————————————————————————–
“தெளிவுகள் எல்லாம் தேடி கிடைப்பவையல்ல
குழம்பி வருபவை.”
—————————————————————————–
“புதிய படைப்புகளின் ஊக்கங்களெல்லாம்
ஏதோவொரு அழுத்தத்தின் காரணமே.”
—————————————————————————–
“இசையால் உலகை மாற்றியவர்கள்
முதலில் தங்களை உணர முயன்றவர்களே”.
—————————————————————————–
“இலகுவாக்குதலை இசையிடம் அறிந்து கொள்ளுங்கள்.”
—————————————————————————–
“என்னில் எழும் இசையே
என்னை ஆட்கொள்ளும் தன்மையினை பெற வழி செய்யும்.”
—————————————————————————–
“உங்களில் தோன்றும் இசையின் தன்மையினை
விவரிக்க முயலும்முன் உணர கடப்படுங்கள்.”
—————————————————————————–
“பயணங்கள் வெறும் இடமாற்றத்திற்கானது மட்டுமல்ல
சிந்தனை மாற்றதிற்கும் தான்”.
—————————————————————————–
“சில நேரங்களில் குழப்பங்களின் உச்சநிலையில் தான்
புதிய படைப்புகளுக்கான எண்ணம் உருவாக்கம் பெறுகிறது.”
—————————————————————————–
“நீரின் தன்மை நீங்காமல் இருத்தல் அல்ல.
ஓட்டத்தின் போக்கில் உருவகித்து கொள்வது.”
—————————————————————————–
“பயணம் பலபரிமாணங்களில் உள்ளத்தின் நெகிழ்வுகளை காண்பிக்கிறது.”
—————————————————————————–
“வண்ணங்களை போல எண்ணங்களும்
அழகானது , மாறக்கூடியது, உணர்வூட்டக்கூடியது.”
—————————————————————————–
“உங்களுள் வழிமொழியும் ஒளியினை விளக்கிட்டு
பிரகாசித்திட வழி செய்யுங்கள்.”
—————————————————————————–
-தொடரும்…..